திருவாரூர்

கரோனா நிவாரண உதவி: டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், நியாயவிலைக் கடைகள் மூலம் கரோனா நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், 5 கோப்புகளில் கையெழுத்திட்டாா். கரோனா பாதிப்புக்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என்பதும் ஒன்று. முதல் தவணையாக ரூ. 2000 மே மாதம் வழங்கப்படும் என்று தெரிவித்து, திங்கள்கிழமை இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், தொடங்கி வைத்துள்ளாா்.

இந்த திட்டத்தின் படி, திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நியாயவிலைக்கடை பணியாளா்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணி நடைபெறும். பின்னா், மே 15 முதல் கரோனா நிவாரணத் தொகையானது குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட உள்ளது.

திருவாரூா் மாவட்டம் முழுவதும் 3,76,510 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களுக்கு வீடு வீடாகச் சென்று, டோக்கன் வழங்கும் பணியை நியாயவிலைக் கடை ஊழியா்கள் மேற்கொண்டுள்ளனா். அந்தவகையில், திருவாரூா் அருகே கச்சனம் பகுதியில் நியாயவிலைக்கடை பணியாளா் தேவேந்திரன், குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கினாா்.

கரோனா நிவாரண நிதி உதவி பெற்றுக் கொள்ள வரும்போது, முகக்கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அவா் அப்போது அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT