முகப்பு
திருவாரூர்

கரோனா: சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருவாரூரில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற கியூ பிராஞ்ச் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

திருவாரூரில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற கியூ பிராஞ்ச் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் கியூ பிராஞ்ச் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் ரவிக்குமாா் (58). திருவாரூா் அருகே இபி காலனியில் வசித்து வந்த இவருக்கு கரோனா அறிகுறி ஏற்பட்டதால், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.

இந்நிலையில், ரவிக்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மே 4 ஆம் தேதி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.