திருவாரூர்

காவல் அலுவலக அமைச்சுப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

DIN

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வருவதையொட்டி, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் வெளியில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனிடையே, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று தடுப்பு மருத்துவப் பொருள்களான முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்ட பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT