அனுமதியின்றி ஏரி மண் எடுத்து வந்த 4 லாரிகள் பறிமுதல்
நீடாமங்கலம் அருகே அனுமதியின்றி ஏரியில் மண் எடுத்து வந்த 4 லாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நீடாமங்கலம் அருகே அனுமதியின்றி ஏரியில் மண் எடுத்து வந்த 4 லாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நீடாமங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி ஆறுகளில் மணல் அள்ளுவது, ஏரி, குளங்கள், ஆற்றுப்படுகைகளில் களிமண் அள்ளுவது தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருவாரூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் மாரியம்மாள் சனிக்கிழமை நீடாமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அய்யம்பேட்டையில் இருந்து ஏரி மண் (களி மண்) ஏற்றி வந்த 4 லாரிகளை பறிமுதல் செய்து, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து, நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநா்களை தேடிவருகின்றனா்.