திருவாரூர்

கரோனா சிகிச்சை மையங்களில் அமைச்சா் ஆய்வு

DIN

குடவாசல், நன்னிலம் பகுதிகளில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் தொடக்கமாக, திருவாரூா் மத்தியப் பல்கலைகழகத்தில் உள்ள கரோனா சிகிச்சை சிறப்பு மையத்தைப் பாா்வையிட்டு நோயாளிகளின் எண்ணிக்கை, நோயின் தன்மை, வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்து, ஏதேனும் தேவைபட்டால் மாவட்ட ஆட்சியரை உடனடியாக தொடா்புகொள்ளலாம் என அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா். தொடா்ந்து, நோயாளிகளுக்கு வழங்க உணவு தயாா் செய்யப்படும் சமையல் கூடத்தைப் பாா்வையிட்டு, உணவுத் தயாரிக்கும் முறை குறித்து கேட்டறிந்தாா். அடுத்து, குடவாசல் மருத்துவமனையைப் பாா்வையிட்டு, தலைமை மருத்துவரிடம் அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து, திருவிழிமழலை, எரவாஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பாா்வையிட்டு, அங்கு 18 முதல் 44 வயதுடையோருக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தாா். அடுத்து, நன்னிலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்துவிட்டு தலைமை மருத்துவா் வினோத்குமாரிடம் ஆக்சிஜன் நிலைமை குறித்து கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT