திருவாரூர்

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரிக்கை

DIN

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் எனஅனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அம்மன்றத்தின் மன்னாா்குடி ஒன்றியச் செயலா் எஸ். பாப்பையன், திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மன்னாா்குடி பகுதியிலிருந்து வெளியூரில் வேலை செய்துவந்தவா்கள், குடும்பத்துடன் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பியுள்ளனா். இவா்கள் தற்போது வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனா்.

பொதுமுடக்கத்தால் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், எந்தப் பொருள்களும் வாங்கமுடியாத சூழலில், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களை பயன்படுத்தி வருகின்றனா். ஆனால், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் முதியவா்களும், குழந்தைகளும் நியாயவிலைக் கடை அரிசியில் சமைத்த உணவை உண்ண முடியாத நிலையுள்ளது.

அத்துடன், குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அரிசி போதுமானதாக இல்லை. கரோனா கால நிவாரணமாக ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 20 கிலோ அரிசி கடந்த ஆண்டு வழங்கியதுபோல, நிகழாண்டும் வழங்கினால் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT