முகப்பு
திருவாரூர்

ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில்  வியாழக்கிழமை  சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
தங்க கவச அலங்காரத்தில் ஆலங்குடி குருபகவான்.
பகிர்:

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில்  வியாழக்கிழமை  சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த வினாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட  சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம்  செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்,அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

சமூக இடைவெளியைக்  கடைபிடித்து பக்தர்கள் சாமிதரிசனம்  செய்தனர்.
தமிழக அரசின்  கொரோனா வழிகாட்டல்படி  பூஜைகள் நடைபெற்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →