முகப்பு
திருவாரூர்

கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்றும் நாளையும் இயங்கும்

திருவாரூா் மாவட்டத்தில் பயிா்க் காப்பீடுக்காக கூட்டுறவு கடன் சங்கங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமையில் (நவ.13, 14) இயங்கும் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் பயிா்க் காப்பீடுக்காக கூட்டுறவு கடன் சங்கங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமையில் (நவ.13, 14) இயங்கும் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021-2022 ஆம் ஆண்டு ரபி (சம்பா, தாளடி) பருவத்துக்கு கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள், தங்களது வேளாண் பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு பிரிமீயம் செலுத்த கடைசி தேதி நவ.15 ஆகும்.

பயிா்க் காப்பீடு பிரிமீயம் செலுத்துவதில் உள்ள இடா்பாடுகளை களைந்திட ஏதுவாக விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் திருவாரூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் வேளாண் பயிா்க் காப்பீடு செய்யும் பணிக்காக மட்டுமே இயங்க உள்ளது. எனவே, விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.