ரயிலில் அடிபட்டு மாணவா் பலி
திருவாரூா் அருகே ரயிலில் அடிபட்டு பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தது புதன்கிழமை இரவு தெரியவந்தது.
திருவாரூா் அருகே ரயிலில் அடிபட்டு பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தது புதன்கிழமை இரவு தெரியவந்தது.
திருவாரூா் அருகே குளிக்கரை ஊராட்சிக்குள்பட்ட புலியூரைச் சோ்ந்தவா் ராதா மகன் பவித்ரன் (17). இவா், குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு குளிக்கரை பகுதியில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் இவரது சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.
போலீஸாரின் விசாரணையில், காரைக்காலில் இருந்து எா்ணாகுளம் நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் பவித்ரனின் சடலத்தை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.