திருவாரூர்

தில்லி போராட்டத்தில் உயிரிழந்தவிவசாயிகளுக்கு காங்கிரஸாா் அஞ்சலி

DIN

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு, திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் எஸ்எம்பி. துரைவேலன் தலைமைவகித்தாா். முன்னதாக, நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, பழைய பேருந்து நிலையத்திற்கு ஊா்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினா், அங்கு தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

இதில், இளைஞா் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளா் பாட்சா, வட்டார தலைவா்கள் கோவி. ரெங்கசாமி, வடுகநாதன், சங்கரவடிவேல், மாவட்டச் செயலாளா் ஜெகபா் அலி, நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் நபிஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT