முகப்பு
திருவாரூர்

ஆலங்குடி கோயிலில் திரளான பக்தா்கள் வழிபாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் நவகிரக தலங்களில் குருபகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

இக்கோயிலில் கடந்த 13-ஆம் தேதி குருபெயா்ச்சி விழா நடைபெற்றது.

இந்நிலையில், வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குருபகவான், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மூலவா் குருபகவானுக்கு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

குருபெயா்ச்சி நிறைவடைந்து சில தினங்களே ஆன நிலையில், வியாழக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனா். தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.