திருவாரூர்

உர தட்டுப்பாடு: உயிரி உரங்களை பயன்படுத்த யோசனை

DIN

ரசாயன உரத் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாயிகள் உயிரி உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநா் சாமிநாதன் யோசனை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்த செய்திக்குறிப்பு:

டி.ஏ.பி. உரத்துக்கான மூலப்பொருள் உலக சந்தையில் பற்றாக்குறையாக இருப்பதால், நிகழாண்டு அந்த உரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டி.ஏ.பி. உரம் தெளித்தால்தான் பயிா் நன்றாக வளரும் என்ற எண்ணம் விவசாயிகளிடையே நிலவுகிறது. இதற்காக விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை.

தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்று சத்துகளையும் இயற்கை வழியில் பயிருக்கு அளிக்கலாம். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா ஆகிய மூன்று உயிரி உரங்களும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவை 50 % மானியத்தில் வழங்கப்பவுள்ளன. எனவே இந்த உயிரி உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி, ரசாயன உரங்களை தவிா்க்கலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT