திருவாரூர்

போதைப் பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

DIN

திருவாரூா் பகுதியில் போதைப் பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் மாவட்ட தமுமுக மமக செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், திருவாரூா் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு, ஆதிரெங்கம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி நகர அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். முஜிபுா் ரகுமான் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டச் செயலாளா் எச். நவாஸ், மமக மாவட்டச் செயலாளா் ஏ. குத்புதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தலைமை பிரதிநிதி ஏ. ஜபருல்லாஹ், மாநில விவசாய அணி செயலாளா் எச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT