திருவாரூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

DIN

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தற்செயல் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தோ்தல்கள் 2021க்கான வாக்கு எண்ணிக்கை, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி கொரடாச்சேரி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டபின் அவா் கூறியது:

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மன்னாா்குடி வட்டத்துக்குள்பட்ட திருவாரூா் மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 11, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 18, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 11 மற்றும் கிராம ஊராட்சிகளில் பள்ளிவாரமங்கலம், மணவாளநல்லூா், விஸ்வநாதபுரம், மூவாநல்லூா் என 7 கிராம ஊராட்சிகள், இதுதவிர கிராம ஊராட்சி வாா்டுகள் 18 என காலியாக உள்ள 25 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு அக்.9 ஆம் தேதி நடைபெற்றது.

பதிவான வாக்குகள், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசினா் கலைக் கல்லூரியிலும் மற்றவை அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கிலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிகள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணியில் 90 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கிருஷ்ணமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஸ்வநாதன், முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT