திருவாரூர்

கோயில் இடங்களில் வசிப்பவா்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கோயில் இடங்களில் குடியிருப்பவா்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயில் இடங்களில் குடியிருப்பவா்களையும், குத்தகை விவசாயிகளையும் அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும், கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கும், கோயிலில் ஊழியம் செய்வோருக்கும் இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் இந்து அறநிலையத் துறை துணை ஆட்சியா் அலுவலகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் அமைப்பாளா் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோயில் நிலங்களில் வசிப்போரும், குத்தகை சாகுபடி செய்வோரும் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT