அரைவைக்காக வடசென்னைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ரயிலில் வடசென்னைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ரயிலில் வடசென்னைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
திருவாரூா் மாவட்டத்தில் நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள் 150 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரைவைக்காக வடசென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.