முகப்பு
திருவாரூர்

பயிா்க் காப்பீட்டுத் திட்ட குளறுபடியை களைய வலியுறுத்தல்

கடந்த ஆண்டுக்கான சம்பா பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் குளறுபடிகளை களைந்து, அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

கடந்த ஆண்டுக்கான சம்பா பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் குளறுபடிகளை களைந்து, அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூா் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள் விடுத்த அறிக்கை:

கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிா்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது. ஆனால், பயிா்க் காப்பீடு தொடா்பாக முறையாக கணக்கெடுக்கப்படவில்லை. கிராமம் முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 முதல் 5 சதவீத பாதிப்பு என காப்பீட்டு நிறுவனங்கள் கணக்கெடுத்துள்ளன. இதனால் இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

எனவே, கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு பாதிப்பை மதிப்பிடுவதற்கு பதிலாக, தனி விவசாயியை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் வகையில் மாற்றம் செய்யவேண்டும்.

கணக்கெடுப்பில் குளறுபடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குளறுபடிகளை களைந்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.