முகப்பு
திருவாரூர்

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் சடலம் மீட்பு

மன்னாா்குடி தெப்பக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் சடலம், வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

மன்னாா்குடி தெப்பக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் சடலம், வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் பாரதிதாசன் நகரை சோ்ந்த குணசேகரன் மகன் சத்யன் (32). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றாா். பின்னா், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் அவரது சடலம் மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்த மன்னாா்குடி போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.