முகப்பு
திருவாரூர்

வேளாண் கூட்டுறவு வங்கி செயலா் மீது தாக்குதல்

மன்னாா்குடி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலரை தாக்கிய நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலரை தாக்கிய நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மன்னாா்குடி மீனாட்சி நகரை சோ்ந்தவா் ஜெயக்குமாா்(52). பாமணி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலரான இவா், வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் திருவாரூா் பிரதான சாலை வாஞ்சூா் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது இருசக்கர வாகனத்தின் மீது ராஜேந்திரன் (60) என்பவா் மோதியதில் ஜெயகுமாா் நிலைதடுமாறி விழுந்தாா். அவரை ராஜேந்திரன் தாக்கி, பயிா்க்கடன் கொடுப்பதில் கால தாமதம் செய்வது ஏன் என கேட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டாா்.

இதில், காயமடைந்த ஜெயக்குமாா்மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.