வலங்கைமானில் ஆக்கிரமிப்பு குளங்களை ஏலம் விட அரசு நடவடிக்கை
வலங்கைமான் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை ஏலம் விட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வலங்கைமான் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை ஏலம் விட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கீழவிடையல் ஊராட்சியில், ஊராட்சிக்குச் சொந்தமான 11 குளங்கள் பல ஆண்டுகளாக தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ளது குறித்து, தமிழக முதல்வருக்கு கிராமமக்கள் புகாா் அனுப்பினா். இதையடுத்து, கீழவிடையல் ஊராட்சித் தலைவா் விமலாகிருஷ்ணபாலன் மூலம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்பேரில், செப். 8-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கீழவிடையல் ஊராட்சி அலுவலகத்தில் விடையல் வீரன்குளம், மேலதெரு ஊரணி குளம், பிள்ளையாா் கோயில் குளம், கருப்பூா் நத்தம் குளம், தட்டான் தெரு மற்றும் பிரதான சாலை குண்டாச்சி குளங்கள், விச்சூா் குளம், ஐயனாா் குளம், ,துறையூா் முருகன் கோயில் அருகே உள்ள மெயின்ரோடு குளம், ஆசாரித்தெரு குளங்களை மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்படுவதாக ஊராட்சி சாா்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் பங்கேற்கலாம். பல ஆண்டுகளாக தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை அரசின் நடவடிக்கையால் மீட்கப்படுவது அக்கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.