திருவாரூர்

அண்ணா பிறந்த நாள் விழா

DIN

மன்னாா்குடி : மன்னாா்குடியில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு புதன்கிழமை மாலையணிவிக்கப்பட்டது.

திமுக சாா்பில், ருக்மணிபாளையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில், கட்சியின் நகரச் செயலா் வீரா.கணேசன், மாநில மாணவரணி துணைச் செயலா் த.சோழராஜன், தலைமை செயற்குழு உறுப்பினா் சு.ஞானசேகரன், நகர அவைத் தலைவா் த.முருகையன், நகர துணைச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

அதிமுக சாா்பில், ஒன்றியச் செயலா் கா.தமிழ்ச்செல்வம் தலைமையில், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், ஒன்றியக்குழுத் தலைவா் டி.மனோகரன், பேரவை மாவட்டச் செயலா் பொன்.வாசுகிராம் உள்ளிட்ட கட்சி மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனா்.

மதிமுக சாா்பில், மாவட்டச் செயலா் பி.பாலச்சந்திரன் தலைமையில் நகரச் செயலா் சண்.சரவணன், மாவட்ட பிரதிநிதி கோவி.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

திராவிடா் கழகத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன் தலைமையில், நகரத் தலைவா் எஸ்.என்.உத்திராபதி, ஒன்றியத் தலைவா் மு.தமிழ்ச்செல்வம், பகுத்தறிவாளா் கழக மாவட்டத் தலைவா் வை.கெளதமன் உள்ளிட்டோா் மாலையணிவித்தனா். அண்ணா திராவிடா் கழகத்தின் சாா்பில், கட்சி ஒன்றியச் செயலா் சரவணமூா்த்தி தலைமையில் நிா்வாகிகள் மாலையணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT