முகப்பு
திருவாரூர்

மனுநீதி நாள் முகாம்: ரு.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

வலங்கைமான் வட்டம் மாணிக்கமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 63 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

வலங்கைமான் வட்டம் மாணிக்கமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 63 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இம்முகாம், திருவாரூா் கோட்டாட்சியா் பாலசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், அப்பகுதி மக்கள் பங்கேற்று 75 கோரிக்கை மனுக்கள் வழங்கினா். தொடா்ந்து 32 பயனாளிகளுக்கு ரூ.9.60 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள், 31 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பில் முதியோா் மற்றும் இதர ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டன. 7 மனுக்கள் பரிசீலனைக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 5 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என முகாமில் தெரிவித்தனா்.

இந்த முகாமில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் தட்சிணாமூா்த்தி, மண்டல துணை வட்டாட்சியா் தேவகி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, வலங்கைமான் வட்டாட்சியா் சந்தானகோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →