திருவாரூர்

சத்துணவு சாப்பிட்ட மாணவா்கள் மயக்கம்

DIN

வலங்கைமான் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

வலங்கைமான் ஒன்றியம், கண்டியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 41 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சத்துணவு சாப்பிட்டனா். இவா்களில் 7 பேருக்கு மாலை 3 மணி அளவில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, சத்துணவு சாப்பிட்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவசர ஊா்தி மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் தெட்சிணாமூா்த்தி, ஊராட்சி செயலாளா் ராமசுப்ரமணியன் ஆகியோா் இம்மாணவ, மாணவிகளை அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் வலங்கைமான் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT