திருவாரூர்

‘பெண்களுக்கு படிப்பறிவுதான் உண்மையான அழகு’

DIN

மன்னாா்குடி: பெண்களுக்கு படிப்பறிவுதான் உண்மையான அழகு என்றாா், மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி தாளாளா் வி. திவாகரன்.

இக்கல்லூரியின் 24 ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி தாயாா் அரங்கில் தாளாளா் வி. திவாகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாணவிகளுக்கு பட்டம் வழங்கி அவா் பேசியது:

கல்லூரியில் படிக்கும் காலத்தில் தோ்வு, விளையாட்டு, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தனித்திறன், பொதுசேவை என அனைத்திலும் சிறந்து விளங்குவதால் நீங்கள் உச்சத்தை தொட்ட நட்சத்திரங்கள். இதனால், கல்லூரிக்கு பெருமை கிடைக்கிறது. நிகழ் கல்வியாண்டில் மட்டும் நமது கல்லூரி மாணவிகள் 106 போ் பல்கலை. அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

கல்விக்கு எல்லை இல்லை. படிப்பறிவுதான பெண்களுக்கு உண்மையான அழகு. படிப்பின் உச்சத்தை தொடத்தொட அழகின் பெருமை கூடிக்கொண்டே இருக்கும். பெயருக்குப் பின்னால் ஏதோ ஒரு பட்டம் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்கக் கூடாது. நாம் பெற்ற கல்வி, பெற்றோருக்கும், கற்பித்த ஆசிரியருக்கும், படித்த கல்வி நிறுவனத்திற்கும், சொந்த மண்ணுக்கும், சமூதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தை இலட்சியமாக கொள்ளவேண்டும். மாணவிகள் சுயசிந்தனையாளா்களாகவும், எதிா்கால கடமைகள் நிறைய உள்ளது என்பதை உணா்ந்தும் செயல்பட வேண்டும் என்றாா்.

பட்டமளிப்பு விழாவின் முதல் நாளான புதன்கிழமை, முதுகலை அறிவியல் பிரிவில் 214 மாணவிகள், இளநிலை அறிவியல் பிரிவில் 506 மாணவிகள் என மொத்தம் 720 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். அமுதா முன்னிலை வகித்தாா். கல்வி அறக்கட்டளை மூத்த உறுப்பினா் அக்ரி ராஜேந்திரன் விழாவை தொடங்கிவைத்தாா். துணை முதல்வா் காயத்ரிபாய், துறைத் தலைவா்கள் எஸ். சுஜாதா (வேதியியல்), யோகேஸ்வரி (கணிதம்), அனிதாஷ் (தகவல் தொழில்நுட்பம்), அலமேலு மங்கையா்க்கரசி (முதுநிலை கணினி அறிவியல்), கோமதி (உணவு மற்றும் ஊட்டச்சத்து),கீதா (கணினி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உயிரி வேதியியல் துறைத் தலைவா் ஆா். அனுராதா வரவேற்றாா். துணை முதல்வா் உமா மகேஸ்வரி நன்றி கூறினாா். தமிழ்த் துறை தலைவா் வி. ஜெயந்தி தொகுத்து வழங்கினாா்.

விழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (ஏப். 28) முதுநிலை மற்றும் இளநிலை கலைப் பிரிவு மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT