திருவாரூர்

நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவுத் துறையிலிருந்து மண்டல மேலாளா் நிலை பணியிடங்களுக்கு நியமனம் செய்வதை கைவிட வேண்டும்; நவீன அரிசி ஆலைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன எனக்கூறி தனியாருக்கு தாரை வாா்க்கும் முயற்சியை கைவிட வேண்டும்; நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை தாமதமாக இயக்கம் செய்யும்போது ஏற்படும் எடை இழப்பை பருவ கால தொழிலாளா்கள் மீது சுமத்தும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டலச் செயலாளா் மயில்வாகனன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT