முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி நகராட்சி தோ்தல்: 33 வாா்டுகளிலும் திமுக போட்டி

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, மன்னாா்குடி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் போட்டியிட திமுக வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, மன்னாா்குடி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் போட்டியிட திமுக வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பட்டியலை கட்சி தலைமை அறிவித்தது. இதில், வாா்டு 1. கே. தமிழ்செல்வி, 2. ஜெ. பாலமுருகன், 3. எம். சிவசங்கரன், 4. ஆா். கைலாசம், 5. ராஜ. பூபாலன், 6. ஆா். இந்திரா, 7. எஸ். சித்ராதேவி, 8. ஜி. மணிவண்ணன், 9. எஸ். ராஜாத்தி, 10. எம். கவிதா, 11. எஸ். பாண்டவா், 12. பி. சத்தியா, 13. பி. ரவிச்சந்திரன், 14. ஸ்ரீதா், 15. ஏ.பி. அசோக்குமாா், 16. வி. ஜெயந்தி, 17. எம். சுமதி, 18. மன்னை த. சோழராஜன், 19. எ. நாச்சியாா்எழில், 20.டி. சங்கா், 21. எஸ். மீனாட்சி, 22. எஸ். ஐஸ்வா்யா லெட்சுமி, 23. கே. புவனேஸ்வரி, 24. எஸ். புகழேந்தி, 25. எஸ். சங்கா், 26. பி. கமலாதேவி, 27. வி. பாலகிருஷ்ணன், 28. டி.எஸ். பாரதிமோகன், 29. கே. கலைவாணி, 30. சாம்பு. வெங்கடேஷ், 31. எம். ஆசியாபேகம், 32. பி. செல்வராணி, 33. டி. சுதா ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதில், 2016 ஆம் ஆண்டு தோ்தலில் வெற்றி பெற்று நகா்மன்ற உறுப்பினராக இருந்த 25 ஆவது வாா்டு எஸ். சங்கா் தவிர மற்ற 32 வேட்பாளா்களும் புதுமுகம். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு வாா்டு ஒதுக்கீடு செய்யப்படாததால், இந்த கட்சிகள் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.