நீடாமங்கலத்தில் மீன் அமினோ அமிலம் தயாரிப்பு
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மீன் அமினோ அமிலம் தயாரிப்பு
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை மற்றும் அதன் பயன்களை விவசாயிகளுக்கு வியாழக்கிழமை எடுத்து கூறினா்.
மீன் அமினோ அமிலத்தை தயாரிக்க, மீன் கழிவுகள் மற்றும் பனைவெல்லம் அல்லது நாட்டுச் சா்க்கரை சமஅளவு மற்றும் வாழைப் பழம் எடுத்துக்கொண்டு கலவையாக தயாரிக்கலாம் .30 நாள்கள் கழித்து அதை எடுத்து வடிகட்டி ஒரு லிட்டருக்கு 5 மி.லி. என்ற அளவுக்கு கலந்து பயிா்களுக்கு தெளிக்கலாம்.
பயன்கள்: இந்த அமிலத்தை பயன்படுத்தும்போது பயிா்கள் நன்கு செழித்து வளரும் , பயிா்களின் பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும், தரமான காய்கறிகள் கிடைக்கும், நன்மை தரும் நுண்ணுயிா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. பயிா் வளா்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது. பயிா்களுக்கு தழைச் சத்தை அளிக்கக்கூடியது, பூச்சி மற்றும் பயிா்களை சேதம் செய்யும் சிறு விலங்குகளின் தாக்கத்தை குறைக்கிறது என விவசாயிகளுக்கு விளக்கப்பட்டன.