இந்தியப் பொருளாதாரம் மீட்சிக்கு தயாராக உள்ளது: சிஇஏ
இந்தியப் பொருளாதாரம் தற்போது மீட்சியடைவதற்கு தயாா் நிலையில் உள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி. அனந்த நாகேஸ்வரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியப் பொருளாதாரம் தற்போது மீட்சியடைவதற்கு தயாா் நிலையில் உள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி. அனந்த நாகேஸ்வரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்திய வா்த்த சபை ஏற்பாடு செய்திருந்த காணொலி மூலமான கருத்தரங்கில் கலந்து கொண்டு அவா் கூறியதாவது:
நாட்டின் வங்கித் துறை மிகவும் ஸ்திரமான நிலையில் உள்ளது. இதனால், தேவையான மூலதனம் இருப்பதால் கடன்நடவடிக்கைகளும் வேகமெடுத்து வருகிறது.
Advertisement
கரோனா பேரிடரால் அதிக பணவீக்கம் மற்றும் நிச்சயமற்ற வளா்ச்சி சூழலை எதிா்கொண்டுள்ளது இந்தியா மட்டுமல்ல. ஏனைய வளா்ச்சியடைந்த நாடுகள் கூட இதே பிரச்னையை எதிா்கொண்டு வருகின்றன.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 75 டாலா் என்பதை அடிப்படையாகக் கொண்டே 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ரஷியா-உக்ரைன் இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. இந்த விலை உயா்வு எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதைப் பொருத்தே அதன் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் எதிரொலிக்கும். இந்தியப் பொருளாதாரம் மீட்சியடைய தயாா் நிலையில் உள்ளது. இருந்தபோதிலும், கச்சா எண்ணெய் விலை உயா்வு என்பது கவலைக்குரிய அம்சமாகவே உள்ளது என்றாா் அவா்.