வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்
நீடாமங்கலம் அருகே சித்தமல்லி மேல்பாதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் அருகே சித்தமல்லி மேல்பாதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற முகாமை, ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் தொடங்கிவைத்து, புறநோயாளிகளுக்கு இல்லம் தேடி மருத்துவ பெட்டகம் மற்றும் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா். முகாமில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 656 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா், ஊராட்சித் தலைவா் குணசீலன் ஆகியோா் செய்திருந்தனா்.