குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
கூத்தாநல்லூா் நகராட்சியில் அள்ளப்படாத குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூத்தாநல்லூா் நகராட்சியில் அள்ளப்படாத குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சில இடங்களில் குப்பைத் தொட்டிகள் இல்லை. இதனால், குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகின்றன. சில சமயங்களில் குப்பைகள் அள்ளாமல் இருக்கும்போது குப்பைகளை, ஆடுகள், கோழிகள், மாடுகள், நாய்கள் பரப்பி விடுகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், அள்ளப்படாத குப்பைகளால், டெங்கு, காலரா, சிக்குன் குன்யா, தற்போது பரவியுள்ள கரோனா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பிளீச்சிங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.