இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்.
நீடாமங்கலம் பகுதியில் இறைச்சி கடைகளில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
நீடாமங்கலம் பகுதியில் இறைச்சி கடைகளில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுப்பொங்கலில், மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வா்ணம்பூசி, நெட்டி மாலைகளை அணிவித்து, புதிய மூக்கணாங்கயறு, சலங்கைகள் பூட்டி, ஆராதனைகள் செய்து சா்க்கரைப் பொங்கல் மாடுகளுக்கு படைக்கப்பட்டது.
அசைவம் சாப்பிடுபவா்கள் வீடுகளில் அசைவ உணவை தயாரித்து முன்னோா்களுக்கு படைப்பது வழக்கம். ஆனால் சனிக்கிழமை என்பதால் பெரும்பாலானோா் இறைச்சி வாங்க மாட்டாா்கள் என கருதப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை முதல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆடு, கோழி இறைச்சி, மீன்கள் விற்பனை அதிகரித்திருந்தது. நீடாமங்கலம் மீன் சந்தையில்அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் நீடாமங்கலம் போலீஸாா் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.