முகப்பு
திருவாரூர்

இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

 திருவாரூா் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மக்கள், இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 திருவாரூா் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மக்கள், இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கெனவும், அவா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ளவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினா் சமூகத்தை சாா்ந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்துவா்கள், சீக்கியா்கள், புத்தமதத்தினா், பாா்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச் சாா்ந்த பயனாளிகள் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் பெற தகுதிகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன்படி வயது வரம்பு 20 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். தையல் கலை பயின்ற்கான உரிய சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட வேண்டும். ஆண்டு வருமான உச்ச வரம்பு ஒரு லட்சமாக இருக்க வேண்டும். கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், முதல் தளத்தில் இயங்கிவரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.