முகப்பு
திருவாரூர்

விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு இன்று பொங்கல் பரிசு

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு திங்கள்கிழமை வழங்கப்பட உள்ளதாக மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு திங்கள்கிழமை வழங்கப்பட உள்ளதாக மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும், ஜன.4-ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை திருவாரூா் மாவட்டத்தில் 3,65,155 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு என சுமாா் 94.53 பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை, பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் பெறாமல் விடுபட்டுள்ள 21,137 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜன.17) வழங்கப்பட உள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரா்கள் காலை 7 மணி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.