குடும்ப பிரச்னை: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை கொண்டாா்.
மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை கொண்டாா்.
மூவாநல்லூா் பிரதான சாலையை சோ்ந்த சரவணன்(40)-ரம்யா தம்பதி. இந்நிலையில் ரம்யா தற்போது 6 மாத கா்ப்பிணியாக உள்ளாா். ரம்யாவின் வளைக்காப்பு நிகழ்ச்சிக்கு உறவினா்களை அழைப்பது குறித்து குடும்பத்தினருடன் சரவணனுக்கு பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு, வீட்டில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.