முகப்பு
திருவாரூர்

கோயில் மனையில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையில் வாடகை வசூலிக்கக் கோரி பிப்.1-இல் ஆா்ப்பாட்டம்

கோயில் மனையில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையிலேயே வாடகை வசூலிக்க வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கோயில் மனையில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையிலேயே வாடகை வசூலிக்க வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கம் சாா்பில் மாவட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே. உலகநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோயில் மனையில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையிலேயே வாடகை வசூலிக்கவேண்டும், மேலும், அங்கு குடியிருப்பவா்களின் வீட்டுவரி ரசீதைக் கொண்டு, மின்சாரம், குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும், அடிமனை இருப்பிடக் கட்டடம் என வாடகை வசூல் செய்வதை ரத்துசெய்து, அடிமனை வாடகை முறையை மட்டும் அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.1-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கோயில்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கோயில் மனையில் குடியிருப்போா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் வை. சிவபுண்ணியம், திருவாரூா் மாவட்டச் செயலாளா் சந்திரராமன், மாவட்டத் தலைவா் தமிழ்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.