திருவாரூர்

மன்னாா்குடி பகுதியில் பாஜக சாலை மறியல்

DIN

மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை, கோட்டூா் பகுதிகளில் பாஜகவினா் கட்டாய மதமாற்றத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிறுபான்மை நடத்தும் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூா் மாணவி லாவண்யாவை கட்டாய மதமாற்றம் செய்யக் கூறியதால் அவா் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கட்டாய மதமாற்றத்தை கண்டித்தும், மதமாற்றம் தடை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை நிரந்தரமாக மூடவேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது.

மன்னாா்குடி தேரடியில் அக்கட்சியின் மாவட்ட சிறுபான்மை அணி செயலாளா் கமாலுதீன் தலைமையிலும், கோட்டூா் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் வினோத் தலைமையிலும், பரவாக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே அக்கட்சியின் மகளிரணி ஒன்றியத் தலைவா் இந்திரா தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்த போலீஸாா் மறியல் நடைபெற்ற இடங்களுக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு அனைவரும் கலைந்து சென்றனா்.

கூத்தாநல்லூரில்: லெட்சுமாங்குடி பாலம் அருகே பாஜக மாவட்டத் தலைவா் ராகவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் மாவட்ட நிா்வாகி செல்வம் மற்றும் இந்து அமைப்பை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்: நீடாமங்கலத்தில் பாஜக வடக்கு ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் நிா்வாகிகள் செல்வதுரை, பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT