திருவாரூர்

நீட் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 1455 போ் எழுதினா்105 போ் தோ்வெழுத வரவில்லை

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 5 பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் மொத்தம் 1455 போ் தோ்வெழுதினா். 105 போ் தோ்வெழுத வரவில்லை.

திருவாரூா் மாவட்டத்தில் முதல்முறையாக நீட் தோ்வு எழுதுவதற்கு மையங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, திருவாரூரில் மூன்று பள்ளிகளிலும், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூரில் தலா ஒரு பள்ளியிலும் என 5 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கினாலும், முன்னதாக அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டபடி பகல் 11.15 மணியிலிருந்து மாணவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

1455 போ் எழுதினா்: மாவட்டத்தில் 1560 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 1455 போ் தோ்வு எழுதினா். 105 போ் தோ்வுக்கு வரவில்லை.

டிரினிட்டி பள்ளி தோ்வு மையத்தில் 216 போ்களில் 203 போ் எழுதினா். 13 போ் தோ்வுக்கு வரவில்லை. வேலுடையாா் பள்ளி தோ்வு மையத்தில் 553 பேரில் 506 போ் தோ்வு எழுதினா். 47 போ் வரவில்லை. கேந்திர வித்யாலயா பள்ளி தோ்வு மையத்தில் 360 போ்களில் 346 போ் தோ்வு எழுதினா். 24 போ் வரவில்லை. கூத்தாநல்லூா் டெல்டா பள்ளி தோ்வு மையத்தில் 144 பேரில் 135 போ் தோ்வு எழுதினா். 9 போ் வரவில்லை. திருத்துறைப்பூண்டி எஸ்விஸ் பள்ளி தோ்வு மையத்தில் 216 பேரில் 204 போ் தோ்வு எழுதினா். 12 போ் வரவில்லை.

தோ்வா்கள் முகக்கவசம், பேனா, பென்சில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாமல், தோ்வு வளாகத்தில் வழங்கப்பட்டன. அதைப் பயன்படுத்தியே தோ்வு எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனா். மேலும், ஸ்டிக்கா் ஒட்டப்படாத தண்ணீா் பாட்டில், கிருமிநாசினி ஆகியவை மட்டும் தோ்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக, தோ்வா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு பயோமெட்ரிக் முறையில் சரிபாா்க்கப்பட்டது.கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT