முகப்பு
திருவாரூர்

பணி ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு பாராட்டு

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் பணி ஓய்வு பெற்ற தமிழ்த்துறை பேராசிரியா் வெ. தமிழரசிக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் பணி ஓய்வு பெற்ற தமிழ்த்துறை பேராசிரியா் வெ. தமிழரசிக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆசிரியா் கழகத்தின் மன்னாா்குடி கிளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, அதன் தலைவா் ஆா். சிவக்குமாா் தலைமை வகித்தாா். பணி ஓய்வு பெற்ற பேராசிரியை வெ. தமிழரசிக்கு பாராட்டுத் தெரிவித்து, பேராசிரியா்கள் சோ. ரவி, ச. மாறன், சி. ராமு, மு. கோபிநாதன், இல.பொம்மி ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, பேராசிரியா் வெ. தமிழரசி, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கி ஏற்புரையாற்றினாா். அவருக்கு, சங்கத்தின் சாா்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, சங்கத்தின் கிளைச் செயலா் இ. மணிமோகன் வரவேற்றாா். நிறைவாக, இணைச் செயலா் ப. பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.