முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி: ஜமாபந்தி நிறைவில் நலத்திட்ட உதவிகள்

மன்னாா்குடியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

மன்னாா்குடியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 5 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தி புதன்கிழமை நிறைவு பெற்றது. இதில், முதியோா் ஓய்வூதியத்திற்கான ஆணை, இலவச மனைப் பட்டா, மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கான ஆணை என 210 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசும்போது, இந்த ஜமாபந்தியில் 95 வருவாய் கிராமங்களை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். இதில், மொத்தம் 667 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 376- மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. 244 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 47 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனையில் உள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், மன்னாா்குடி வட்டாட்சியா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.