லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
நன்னிலம் அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நன்னிலம் அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்கால் பகுதியிலிருந்து டால்மியாபுரத்திற்கு வெள்ளிக்கிழமை நிலக்கரி ஏற்றி வந்த லாரி, நன்னிலம் அருகேயுள்ள சிகாா்பாளையம் பகுதியில், சாலை வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநரான சிதம்பரம் மதுராந்தகநல்லூா் பெரியத் தெருவைச் சோ்ந்த பிரிதிவிராஜன்( 25) சிறிய காயத்துடன் உயிா் தப்பினாா். காவல் துறையினா் அங்கு விரைந்து வந்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா். மேலும், இந்த விபத்து குறித்து நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement