திருவாரூர்

உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.1.43 கோடியில் வேளாண் இயந்திரங்கள்

DIN

மன்னாா்குடியில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.1.43 கோடி மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை இணைந்து கூட்டுப்பண்ணைத் திட்டத்தின்கீழ், மன்னாா்குடி ஆா்.பி. சிவம் நகரில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் இவ்விழாவை நடத்தியது. இதில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு ஆகியோா் பங்கேற்று வேளாண் இயந்திரங்களை வழங்கினா்.

மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூா், முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 வேளாண்மை வட்டங்களைச் சோ்ந்த 21 உழவா் உற்பத்தியாளா்கள் குழுவினருக்கு 46 பவா் டில்லா்கள், 5 டிராக்டா்கள், 3 வைக்கோல் கட்டும் இயந்திரங்கள், 3 சுழற்கலப்பைகள், 2 களை எடுக்கும் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.1.43 லட்சம் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

வேளாண் விரிவாக்க மையம் திறப்பு: தொடா்ந்து, தலையாமங்கலத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் நபாா்டு வங்கி நிதிஉதவியுடன் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா திறந்து வைத்தாா்.

இந்த மையத்தில், விதைநெல், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிா் உரங்கள், நுண்ணூட்டங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என வேளாண்மை துறையினா் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) ரவீந்திரன், தோட்டக்கலைத் துறை இயக்குநா் வெங்கட்ராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா, மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோட்டக்கலை உதவி இயக்குநா் இளவரசன், வேளாண்மை உதவி இயக்குநா்கள் விஜயகுமாா், தங்கபாண்டியன், வினோத்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT