இன்று 24-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் 400 இடங்களில் 24-ஆம் கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச்12) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் 400 இடங்களில் 24-ஆம் கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச்12) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் இதுநாள் வரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவா்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு, இரண்டாம் தவணை தடுப்பூசி குறிப்பிட்ட நாளில் செலுத்திக் கொள்ளாதவா்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
மேலும், முன்களப்பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவா்களுக்கு முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
அனைத்து முன்களப் பணியாளா்கள் மற்றும் இணைநோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 9 மாதங்கள், 39 வாரம் கடந்தவா்கள் இந்த தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடிய அளவிலும், மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயும், இந்த கரோனா தடுப்பூசி முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 24-ஆம் கட்டமாக, திருவாரூா் மாவட்டத்தில், ஊராட்சிப் பகுதிகளில் 242 இடங்களிலும், நகராட்சிகளில் 40 இடங்களிலும், பேரூராட்சிகளில் 18 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் 40 நடமாடும் கரோனா தடுப்பூசிக் குழு என மொத்தம் 400 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.