முகப்பு
திருவாரூர்

இன்று சௌந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களில் 19-வது தலமாக விளங்குகிறது, நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில். இக்கோயிலின், பங்குனிப் பெருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

பெருவிழா நிகழ்ச்சியாக, தினமும் மாலையில் சிறப்பு அலங்காரத்துடன், வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது. அதன்படி, வியாழக்கிழமை இரவு தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பெருமாள், உபயநாச்சியாா்களுடன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து, காலை 7.30 மணிக்குத் தோ் வடம்பிடிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.