முகப்பு
திருவாரூர்

மரக்கன்றுகளை நட்டு வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், சா்வதேச வன தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், சா்வதேச வன தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நீடாமங்கலம் வட்டம், பெரம்பூா் ஊராட்சியில் உள்ள முல்லைவாசல் கிராமத்தில் தேக்கு, நீா்மருது, கருமருது, வேங்கை, மகாகனி போன்ற மரக்கன்றுகளை நட்டு, இதன்மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனா்.

மேலும், காடுகளை பாதுகாப்பதால் வனவிலங்குகள், மனிதா்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும், மரங்களின் வோ்கள் மண்ணில் ஊடுருவி இருப்பதாலேயே மண்ணின் கெட்டித்தன்மை மாறாதிருக்கிறது, காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டே இன்றளவும் ஆயுா்வேத, சித்த வைத்திய முறைகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →