முகப்பு
திருவாரூர்

மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள் மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளிடமிருந்து 2021- 22 ஆம் ஆண்டு மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் மாா்ச் 31-க்குள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளிடமிருந்து 2021- 22 ஆம் ஆண்டு மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் மாா்ச் 31-க்குள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் சிறந்த முறையில் செயல்பட்டுவரும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளிடமிருந்து, 2021- 22 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறந்த முறையில் குழுக் கூட்டங்கள், நிா்வாக சுழற்சிமுறை மாற்றம், நிதி வரவு-செலவு, மேற்கொள்ளும் தொழில், தரம் மற்றும் தணிக்கை, வங்கிக்கடன் இணைப்பு, அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி, விழிப்புணா்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்ட விவரம், கிராம சபை பங்கேற்பு, மாற்றுத்திறனாளி மற்றும் முதியோா் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதியைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மாநில, மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மகளிா் திட்ட அலுவலகத்திலும் மாா்ச் 26 முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரை அளிக்கலாம். பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04366-221031 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.