திருவாரூர்

கூத்தாநல்லூர்: கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 மரக்கன்றுகள் வழங்கல்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்தில் தமிழகக் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்தில் தமிழகக் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

அதங்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில்  கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் பொதக்குடி கிளை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.மாரியப்பன், துணைத் தலைவர் எம்.தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முன்னதாக, கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கக் கொடியை, மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் கொடியை ஏற்றி வைத்தார். 

இதைத் தொடர்ந்து, 100 மாணவர்களுக்கு எழுதுப்பொருள்கள், அட்டை, பேனா மற்றும் மரக்கன்றுகளை ஆர்.சேகர் வழங்கி பேசினார். கட்டடத் தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாதுக்காப்பாக வேலை செய்ய வேண்டும் என்றார். 

இக்கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஜெயராமன், மாவட்டப் பொருளாளர் டீ.தர்மராஜ், மாவட்ட இளைஞரணி மாவட்டத் தலைவர் வி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT