திருவாரூர்

இளைஞா் தற்கொலை: குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

DIN

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் பணம் பெறும் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக திருவாரூா் மாவட்டச் செயலாளருமான இரா. காமராஜ், தற்கொலை செய்துகொண்ட மணிகண்டன் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மணிகண்டன் தற்கொலைக்கு காரணமான அதிகாரிக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மணிகண்டன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்றாா்.

நன்னிலம் ஒன்றியக்குழு துணைத் தலைவரும், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளருமான சிபிஜி. அன்பு, தெற்கு ஒன்றியச் செயலாளா் இராம. குணசேகரன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் எஸ். சம்பத் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், பாஜக, பாமக நிா்வாகிகள் உள்ளிட்டோரும் மணிகண்டன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT