திருவாரூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தீர்மானம்

DIN

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
நீடாமங்கலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் மாநில தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அரசு ஊழியர்சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் க.மகேஷ்குமார் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் ஜெ.லெட்சுமிநாராயணன், மாநில பொருளாளர் எம்.வெங்கடேசன், வருவாய்கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு- அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். ஈட்டிய விடுப்பு ஊதியத்தை பணப்பலனாக வழங்க வேண்டும். முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியத்தின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து அவருக்கான ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும். 
போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி வரும் 26.05.2022 அன்று மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர தர்ணா நடத்துவது, 16.06.2022 அன்று சென்னையில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் உண்ணாவிரதம் நடத்துவது, சென்னை உண்ணாவிரதம் தொடர்பாக 06.06.2022 முதல் 15.06.2022 வரை மாநிலம் முழுவதும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது, காதி துறையிலிருந்து பணிநிரவலில் பிறதுறைகளில் ஈர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு தேர்வுநிலை சிறப்புநிலை வழங்க கோரி 15.06.2022 சென்னையில் பெருந்திரள் முறையீடு நடத்துவது, வணிகவரி பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சு. ஜெயராஜராஜேஸ்வரனை பழிவாங்கும் பணிமாறுதல் உத்தரவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 25.06.2022 ல் மாநில அளவிலான தர்ணா போராட்டம் மதரையில் நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. 

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் கு.சாந்தகுமாரி அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார்.மாநில பொருளாளர் எம்.வெங்கடேசன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT