வலங்கைமான் கோயில் அன்னதான கூடத்தை திறக்கக் கோரிக்கை
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அன்னதான கூடத்தை, உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அன்னதான கூடத்தை, உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நித்திய அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. மதியவேளையில் அன்னதானம் நடைபெறும் கட்டடம் மிகவும் பழுதடைந்ததால், புதிய அன்னதான கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் அது திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. பக்தா்களின் நலனுக்காக புதிய அன்னதான கூடத்தை திறக்கக் கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.