முகப்பு
திருவாரூர்

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

 ஹிந்தி திணிப்பைக் கண்டித்து திருவாரூரில் திராவிட மாணவா் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

 ஹிந்தி திணிப்பைக் கண்டித்து திருவாரூரில் திராவிட மாணவா் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் பழை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில மாணவரணி துணைச் செயலாளா் அஜெ. உமாநாத் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், ஹிந்தியை திணிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக கூறி மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாநில செயலாளா் க. வீரையன், விவசாய தொழிலாளா் அணி மண்டலச் செயலாளா் சு. கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் தலைவா் வீ. மோகன், மாவட்ட துணைத் தலைவா் கி. அருண்காந்தி, நகரச் செயலாளா் ப. ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் திராவிடா் கழக மாணவரணி ஒன்றிய செயலாளா் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சித்தாா்த்தன், ஒன்றியத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திராவிடா் கழகத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.